Websiteன்னா இன்னா மாமே… (1)

இந்தப் பகுதியில் நான் எழுதுவது எல்லாமே என் அனுபவத்தில் நான் தேடிக் கற்றவையே. தவறுகள் இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. அப்பிடின்னு சொல்லிட்டு மேட்டர்க்கு வரேன்.

இந்த வெப்சைட்டு, www, html, php, jscript, css அது இதுன்னு ஓவரா சீன் போட்டு குழப்புறாய்ங்களா? கண்ணக் கட்டி காட்டுல விட்டமாதிரி இருக்கா?

ஒரு வெப்சைட் டிசைன் பண்ணணும்… ஆனா யாரப் பாக்குறதுன்னு தெரியல, காசு ஓவராக் கேக்குறாய்ங்க, இங்கிலிபீசுலயே பேசுறாய்ங்க அப்பிடின்னு அனுபவப்பட்டீங்களா?  Cooool…. ரொம்ப எளிதா கத்துக்கிட்டு உங்களுக்குத் தேவையான இணையதளத்தை நீங்களே வடிவமைக்கலாம். பிறருக்கும் வடிவமைத்துக் கொடுக்கலாம்.

முதல்ல இணையதளம் எதுக்கு? பெரிய இன்டர்நேசனல் ஸ்மக்ளிங்கா பண்றோம்ன்னு நினைக்க வேணாம். மெட்ராஸ்ல குதிரை இழுக்குற டிராம் வண்டி ஓடுச்சு தெரியுமா? இப்ப சுரங்க ரயிலே ஓடுது. காலம் மாறுதே…

ஒரு ஹோட்டலுக்குப் போயி “சாப்பிட என்ன இருக்கு”ன்னு கேட்டா “இட்லி, பொங்கல், பூரிசெட்…”னு அடுக்குவார் சர்வர். ஒரு சர்வர் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர்கிட்ட இப்பிடி அடுக்குனா வாய் கிழிஞ்சுபோகும். அதுக்காக ஒரு மெனுகார்ட் பிரிண்ட் பண்ணி, சாப்பிட என்ன இருக்கு, என்ன விலைன்னு ரெடிமேட்டா போட்டு வச்சிட்டா இனி அந்த மெனுகார்ட் எல்லார்ட்டயும் பேசும். சர்வர்க்கு வேலை மிச்சம். அதுமாதிரி ஒரு மெனுகார்ட் தான் இந்த வெப்சைட்.

நீங்க ஒரு இன்டீரியர் டெகரேட்டர் (சும்மாக்காச்சுக்கும்…) உங்களுக்கு நூறுவிதமான டெகரேசன் தெரியும். உங்க கஸ்டமர்க்கு இந்த நூறையும் எப்பிடி விளக்குவீங்க? ஒரு கேட்லாக் போட்டு வைக்கலாம். உங்களத் தேடி வர்றவங்க கிட்ட அத குடுத்தா, அதப் பாத்துட்டு உங்ககிட்ட விலாவாரியா கேட்டுட்டு அப்புறமா முடிவெடுப்பாங்க. உங்களுக்கு நேர விரையம். இப்பிடியே ஒவ்வொரு கஸ்டமரையும் அணுகுனா நேரம் பத்தாது.

இந்த நூறு டெக்கரேசன், சைஸ், கலர், விலைன்னு விலாவாரியா வெப்சைட்ல ஏத்திட்டு இணைய முகவரிய மட்டும் கஸ்டமர் கிட்ட குடுத்துப் பாருங்க.  கஸ்டமர் வெப்சைட் போயி, எல்லா டெகரேசனையும் பாத்துட்டு, விலைய பாத்துட்டு, குடும்பத்துல எல்லார்ட்டயும் பேசி முடிவெடுத்தபிறகு உங்ககிட்ட வருவார். உங்களுக்கும் நேரம் மிச்சம். புரிஞ்சுதோ…?

ரைட்டு… இந்த இணையதளத்தை எப்பிடி டிசைன் பண்றது? எங்க போட்டு வைக்குறது? கஸ்டமர் இணைய முகவரியை அடிச்ச உடனே எப்பிடி வெப்சைட் தெரியுது? இப்பிடி கேள்வி வந்துக்கிட்டே இருக்கும். யோசிச்சு வைங்க… அடுத்த பதிவுல விலாவாரியா சொல்லுறேன்.

Post your Comments...