Google Tips: Google Drive

Google Drive is a Cloud Storage Service. When you open a new Gmail account, it assigns 15GB free storage to every Gmail account. This 15GB storage is shared by Gmail, Google Photos and Google Drive. In Google Drive, you can upload your files from the hard disk. Visit https://drive.google.com and login with your Gmail id and password. Right click on “My Drive” and create new folder or upload your own files and folders.

Instead, use “Backup and Sync” for automated backups. Click “Get Backup and Sync for Windows” on bottom left of GDrive screen, and download the software. After installation, if you right click on a folder, it shows “Sync this Folder”. If you click on this, entire content of that folder will be transferred to GDrive with same folder name. And, if you add more files in that folder or edit existing files, it will reflect on the GDrive also.

Click “Backups” on the GDrive’s left screen to see the backups of your Mobile Phone and WhatsApp messages. And, click on “Computer” and find the Synced folders of your computer.

 

கணினியில் தரவுகளை சேகரிக்க வன்தட்டு (Hard Disk) பயன்படுத்துவது போல, இணையத்தில் தரவுகளை சேகரிக்கும் ஒரு சேவை CLOUD STORAGE. இந்த Cloud Storage சேவையே Google Drive.

நீங்கள் ஒரு ஜிமெயில் கணக்கு துவக்கும்பொழுது, உங்களுக்கு இலவசமாக 15GB இடம் ஒதுக்கப்படும். இந்த 15GB இடத்தை Gmail, Google Photos மற்றும் Google Drive ஆகியவை பயன்படுத்திக் கொள்ளும். உங்கள் கணினியிலிருந்தும், கைப்பேசியிலிருந்தும் முக்கியமான கோப்புகளை எதிர்பாராத இழப்புகளிலிருந்து காக்க Google Driveஇல் பதிவேற்றி பாதுகாத்துக் கொள்ளலாம்.

இப்படிப் பாதுகாப்பதை இருவகையாகப் பிரிக்கலாம்.

1) Remote Upload – முதலில் உங்கள் இணைய உலாவியில் http://drive.google.com என்று உள்ளிட்டு Google Drive தளத்திற்குச் சென்று, உங்கள் Gmail முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு உள்செல்லவும். My Drive பகுதிக்குச் சென்று வலது கிளிக் செய்து போல்டர் உருவாக்கலாம், கணினியிலுள்ள கோப்புகளையோ, போல்டர்களையோ பதிவேற்றலாம்.

2) Backup and Sync – ஒவ்வொன்றையும் பதிவேற்றுவதற்குப் பதிலாக Backup and Sync பயன்படுத்தினால், நீங்கள் உங்கள் கோப்புகளை பதிவேற்றிவிட்டு, பிறகு எப்போதெல்லாம் அந்தக் கோப்புகளை திருத்தம் செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் Google Driveலும் தன்னை மேம்படுத்திக் கொள்ளும்.

Google Drive திரையின் இடது கீழ் மூலையில் Get Backup and Sync for Windows என்பதை கிளிக் செய்து மென்பொருளை பதிவிறக்கி நிறுவவும். அதன்பின் எந்த ஒரு போல்டரையும் வலது கிளிக் செய்து, Sync this Folder என்பதைத் தேர்ந்தெடுத்தால் போதும். உடனடியாக அதே பெயரில் ஒரு போல்டர் Google Driveல் உருவாகி, அதன் கோப்புகள் அனைத்தும் பதிவேற்றப்படும். மேலும் அந்த போல்டரில் எந்த ஒரு கோப்பையும் திருத்தம் செய்தால் அது GDriveலும் உடனடியாக எதிரொலிக்கும். அதோடு, அந்த போல்டரில் புதிதாக எத்தனைக் கோப்புகளை உருவாக்கினாலும் அதுவும் உடனடியாக பதிவேறிவிடும்.  இப்படி பதிவேற்றப்படும் கோப்புகளை Computers என்பதை கிளிக் செய்து காணலாம்.

Backups என்பதை கிளிக் செய்து உங்கள் WhatsApp Backup மற்றும் உங்கள் கைப்பேசியின் Google Drive செயலி மூலம் பதிவேற்றப்பட்டவைகளைக் காணலாம்.

Post your Comments...