இதுதான் இன்டர்நெட் (2)

 இணையதளத்தை எப்பிடி டிசைன் பண்றது? எங்க போட்டு வைக்குறது? கஸ்டமர் இணைய முகவரியை அடிச்ச உடனே எப்பிடி வெப்சைட் தெரியுது?

முதல்ல இன்டர்நெட்ன்னா என்னான்னு பாப்போம். இன்டீரியர் டெகரேசன் டிசைன் சாம்பிள் உங்க கம்ப்யூட்டர்ல இருக்கு. இத நான் என்னோட கம்ப்யூட்டர்ல இருந்து பாக்கணும். இதுக்கு நம்ம ரெண்டு கம்ப்யூட்டரையும் வயரால இணைச்சு, Ethernet Card போட்டு பாக்கலாம். இதுக்குப் பேரு நெட்வொர்க். இந்த நெட்ஒர்க் Transmission Control Protocol (TCP) அப்பிடிங்குற நாட்டாமைத் தீர்ப்புப்படி இயங்குது.

என்னப்போல பத்து கஸ்டமர் பாக்கணும்னா பத்து கம்ப்யூட்டரையும் வயரால இணைக்கலாம். நமக்குள்ள நடக்குற தகவல் பரிமாற்றம் Intranet. இங்க சில சிக்கல் வரும்.

சிக்கல் 1 – உங்க கம்ப்யூட்டர் உங்க ஆபிசுல, என் கம்ப்யூட்டர் என் வீட்டுல இருக்கும். எவ்வளவு நீளத்துக்கு வயர் இழுக்குறது?

சிக்கல் 2 – உங்க கஸ்டமர் எண்ணிக்கை 1000. அதுல பாதி வெளியூர். இத்தன பேரையும் வயர் மாட்டி இணைக்க முடியுமா?

சிக்கல் 3 – உங்க கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணபிறகு, நாங்க யாரும் பாக்கமுடியாது. வயர் போட்டு இணைச்சும் பிரயோசனமில்ல. இந்த Intranet உறுப்பினர்கள் தாண்டி வேறு யாரும் உபயோகிக்கவும் முடியாது.

என்ன பண்ணலாம்? ஏற்கனவே வயரெல்லாம் மாட்டி ரெடியா இருக்குற, 24 மணிநேரமும் ஓடக்கூடிய ஒரு “தல” கம்ப்யூட்டரைத் தேடி, அங்க உங்க டிசைன் எல்லாம் போட்டு வச்சிட்டா, எல்லாரும் அங்க போய் பாத்துக்கலாம். சரியா?

அதாவது, இந்தத் “தல” ஒரு பெரிய கம்ப்யூட்டர். இதுக்கு Serverன்னு பேரு. இந்த செர்வர் உலகம் பூரா இருக்கு. அதுல ஒன்னப் பிடிச்சு, அதுல உங்க டிசைன்ஸ் எல்லாம் ஏத்திக்கலாம். இதுக்கு Hostingனு பேரு.

Hosting பண்ண உடனே உங்களுக்கு செர்வர் ஒரு அட்ரஸ் குடுக்கும். அதுக்கு Domain Nameனு பேரு. உதாரணத்துக்கு http://SankarSrinivasan.com. இத Domain Nameம் சொல்லலாம் இல்லாட்டி URL (Universal Resource Locator)னும் சொல்லலாம்.

உங்க கம்ப்யூட்டர்ல e லோகோவோட ஒரு பட்டன் தெரியும். இது Internet Explorer அப்பிடிங்குற Browser. இந்த பிரவுசர திறந்து அட்ரஸ் பார்ல மேலே உள்ளமாதிரி URL டைப் பண்ணி எண்டர் தட்டுன உடனே, நேரா “தல” செர்வரோட ஜாயிண்ட் ஆகி, உங்க டிசைன் எல்லாத்தையும் காட்டும்.

இதுக்கு எந்த வயர் கனெக்சனும் தேவையில்ல. Internet Protocolங்குற ஒழுங்குமுறையில உலகம் பூரா தரை கேபிள், கடலுக்கடியில் கேபிள், பிரம்மாண்டமான டிஷ் ஆன்டெனா, சாட்டிலைட் எல்லாம் சேந்து இதை சாத்தியாயப்படுத்துது. இதுதான் Internet.

நாடு இருக்குற நிலைமையில சாட்டிலைட் அவசியமான்னு முகநூல்ல எழுதுறானேஅவனோட கேள்வியும் அதே சாட்டிலைட் வழியாத்தான் போகும்

ரைட்டு… URL அல்லது Domain name அடிச்ச உடனே உங்க டிசைன் எல்லாம் பாக்கலாம்னு சொன்னேனே. டிசைனை ஏனோதானோன்னு காட்டமுடியுமா? வெப்சைட் ஒன்னு சூப்பரா டிசைன் பண்ணி, அதுல உங்க இன்டீரியர் டிசைனை இணைச்சு, அப்பிடி பிரமாதப்படுத்துனா தான நல்லா இருக்கும். இதத்தான் Web Designingனு சொல்றோம்.

Internet (தமிழில் இணையம்) உலகத்துல எல்லாமே ஓசியிலயும் கிடைக்கும். காசுக்கும் கிடைக்கும். எது வேணுமோ அது உங்க தேவையப் பொறுத்தது.

Hosting, Domain Name எல்லாமே இலவசமா நிறைய கிடைக்கும். துட்டு குடுத்து வாங்குறதுக்கும் தனியா கிடைக்கும். Web Design பண்ண யாருக்காவது காசு குடுத்து நீங்க டிசைன் பண்ணலாம். இல்லாட்டி அதுக்கான மென்பொருள் மூலமா நீங்களே பண்ணலாம். எது அவசியத் தேவையோ அத துட்டு குடுத்து வாங்கிட்டு, நம்மால முடிஞ்ச வேலைய நாமளே செஞ்சிட்டா காசும் மிச்சம். அறிவும் (இருந்தா) வளரும்!!!

சரி…. வெப்சைட் யாருக்கெல்லாம் வேணும்? யாவாரம் பண்றவங்களுக்குத் தான் முதல்ல தேவைப்பட்டது. இப்போல்லாம் டாக்டருக்கு, எழுத்தாளருக்கு, ஆசிரியருக்கு எல்லாருக்கும் தேவைப்படுது. ஆதார் அட்டைய வெப்சைட்ல போய் தான் டவுன்லோட் பண்றோம். கரண்ட் பில் வெப்சைட்லயே கட்டுறோம்.

நீங்க கதை நல்லா எழுதுவீங்க. ஆனா ஒரு பத்திரிகைக் காரனும் போட மாட்டான். ஏன் கவலை? ஒரு வெப்சைட் தொடங்கி அதுல நீங்க எழுதுங்களேன். நாளைய வரலாறு கூறட்டுமே… நீங்க போட்டோகிராபரா? ஒரு வெப்சைட்ல உங்க திறமைய காட்சிப்படுத்துங்க. வாய்ப்புகள் தேடிவரும்.

ரைட்டு… இனி ஒரு வெப்சைட் எப்பிடி ஆரம்பிச்சு எப்பிடி முடிக்கிறதுன்னு அடுத்த பதிவுகள்ல பாப்போம். அதுவரை சந்தேகம் இருந்தாலும், கழுவி ஊத்த நினைச்சாலும் கமெண்ட்ல போடுங்க. நீங்க முகநூல்ல கமெண்ட் போட்டாலும் இங்க வந்துரும். அது எப்பிடி அங்க போட்டா இங்க வரும்னு அப்பால சொல்றேன்.

டிரை பண்ணுங்க… 🙂

Post your Comments...