இணையப் பாதுகாப்பு (3)

இணையமும் பாதுகாப்பும்…

மெயின் சப்ஜெக்ட் போறதுக்கு முன்னாடி, இணையம் எந்தளவு பாதுகாப்பானதுன்னு தெரிஞ்சுக்கலாம். இணையத்தில் பாதுகாப்பு என்பது 1 சதவீதமே என்பது யதார்த்த உண்மை. 99% பாதுகாப்பின்மையே நிலவுகிறது. காரணம் என்ன?

ஒரு வங்கிக்கணக்கைத் துவக்கி, உங்களிடமுள்ள பணத்தைப் போட்டுவைத்தால் பணத்திற்குப் பாதுகாப்பு. வங்கிக்கிளைக்குச் சென்று பணம் எடுப்பதும், செலுத்துவதும் உங்கள் கணக்கை நீங்களே பராமரிக்கிறீர்கள் என்பதற்கு உதாரணங்கள்.

அதேநேரம், எப்போது ATM கார்டை வாங்குகிறீர்களோ அப்போதே உங்கள் பணத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. உங்கள் ATM கார்டை யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். ஸ்கிம்மர் கருவி மூலம் உங்கள் ATM கார்ட் தகவல்களைத் திருடி, வேறொருவர் பணம் எடுக்கலாம். Netbanking ID, passwordஐ திருடி வேறொருவர் உங்கள் பணத்தைத் திருடமுடியும்.

இந்த ATM இயந்திரங்கள், ஸ்கிம்மர், நெட்பேங்கிங் எல்லாமே சாப்ட்வேர்களால் இயங்குபவை. ஆக, சாப்ட்வேர் நன்கு தெரிந்த யாரும், திருடும் வழிகளை உருவாக்கவும் முடியும் என்பதே இதில் அறியவேண்டிய உண்மை.

இன்டர்நெட்டும் இதேபோல் தான். இதுவும் சாப்ட்வேர் ராஜ்யம் தான். சாப்ட்வேரால் உருவான இணைய தளத்தை, வேறொரு சாப்ட்வேர் எழுதி முடக்கலாம். இது hacking எனப்படும். வைரஸ் என்னும் சாப்ட்வேர் எழுதி இணையம் மூலம் பரப்பலாம். உங்கள் பரிமாற்றங்களை வேவுபார்க்கும் Spyware, உங்கள் கணிணியின் பைல்களை எல்லாம் கைப்பற்றி, காசு குடுத்தால் விடுவிப்பேன் என மிரட்டும் ரான்சம்வேர் என எல்லாமே சாப்ட்வேர் தான்.

நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கும் இணையதளத்தை, பத்தே பத்துவரி புரோகிராம் எழுதி முடக்க முடியும். அதேநேரம், எவரும் முடக்காதபடி Firewall சாப்ட்வேர் உருவாக்க முடியும். ஆனால், Firewallக்கு டிமிக்கி குடுக்கும் வைரசை உருவாக்கவும் முடியும். இப்படி இணையத்தில் எதையும் உருவாக்கவோ, அழிக்கவோ முடியும்.

ஆக, இணையதளத்தை உருவாக்கும்போதே அதைப் பாதுகாப்பு அம்சங்களோடு உருவாக்கிட வேண்டும். Anti Virus, Firewall, Anti Spyware என எல்லாமே இணையத்தில் ஓசியிலும் கிடைக்கும். விலைக்கும் கிடைக்கும். நம் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதெல்லாம் பயமுறுத்தல் இல்லை. யதார்த்தம். பாதுகாப்பின்மை என்பதற்காக உபயோகிக்காமல் இருக்கமுடியாது. ஆக்சிடென்ட் நடந்தாலும் ரோட்டுல போகாம இருக்கோமா? அப்பிடித்தான்.

அடுத்து நாம் நமக்கான இணையதளத்தை உருவாக்கச் செல்லலாம்…

Post your Comments...