இணையதளத்தின் அடிப்படைகள் (4)

இணையதளம் பல வகைப்படும். டெக்னிக்கல் சமாச்சாரம் நமக்குத் தேவையில்லை. நமக்கு என்ன தேவையோ அதை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஏற்கனவே பாத்தது போல, இணையதளம் என்பது சாப்ட்வேரால் எழுதப்படுவது. துவக்க காலத்தில் HTML மொழியில் இணைய பக்கங்கள் எழுதப்பட்டது. இப்போ PHP, CSS, JavaScript, ASP.NET இன்னும் பல மொழிகளில் எழுதப்படுகிறது.

ஒரு இணையப்பக்கம் எப்படி புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காண பிரவுசரில் ஒரு இணையதளம் திறந்திருக்கும் போது, Right Click செய்து View Source என்பதை கிளிக் செய்தால், Program வரிகள் தோன்றும்.

துவக்கநிலையிலுள்ள நாம் இந்த புரோகிராம் மொழியறிவை வளர்க்க வேண்டியதில்லை. அது இல்லாமலே உருவாக்கலாம்.

உங்கள் தேவைக்கேற்ப இணையதளத்தை இரு பிரிவாகப் பிரிக்கலாம்.

1) Blog
2) Self hosted site

Blog என்பது குமுதம் புத்தகத்தில் ஒரு ஓரத்தில் உங்கள் ஜோக் வெளியாவது போல… http://blogger.com http://wordpress.com ஆகிய தளங்கள் குமுதம் புத்தகம் போன்றவை. அங்கு சென்று ஒரு கணக்கைத் துவங்கி, உடனடியாக எழுதத் துவங்கலாம். நீங்கள் ஒரு கவிஞரோ, எழுத்தாளரோ அல்லது ஆய்வாளரோ, எப்பொழுதாவது எழுதவேண்டும் என்று நினைத்தால் இதை உபயோகிக்கலாம். இன்று பல எழுத்தாளர்கள் இதை உபயோகிக்கிறார்கள். இதில் உங்களுக்கு URL இப்படி வழங்கப்படும்.

http://sankarsrinivasan.blogspot.com
http://sankarsrinivasan.wordpress.com

இதுபோன்ற தனிப்பட்ட பயன்பாடுகளுக்கு இதைப் பயன்படுத்தலாம். முழுவதும் இலவசமே.

அதேநேரம், தொழில் பயன்பாட்டிற்கோ அல்லது பரந்துபட்ட ஆய்வு நோக்கத்தை எழுதுவதற்கோ இந்த Blog பயன்படாது. உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் அலுவலகத்திற்காக ஒரு இணையதளம் துவக்குகிறீர்கள். அதை http://leopardbooks.wordpress.com என்று துவக்குவீர்களானால், வாடிக்கையாளர் மத்தியில் “உருப்படியா ஒரு வெப்சைட் இல்லையா” என்ற எண்ணமே எழும். இதையே http://leopardbooks.com என்ற URLல் உருவாக்குவீர்களானால், உங்கள் மதிப்பு கூடும். இதற்கு உதவுவதே Self hosted website.

இந்த Self hosted website உருவாக்க உங்களுக்குத் தேவைப்படுவது…

1) CMS எனப்படும் Content Management System

WordPress.org, Joomla போன்றவை சிறந்த CMS. குறிப்பாக WordPress.org மிக எளிது. மற்றும் இலவசம்.

2) URL அல்லது Domain

http://yourname.tk போன்றவை இலவசம். http://yourname.com தேவையானால் ஆண்டுக்கு 800 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தவேண்டும்.

3) Hosting

ஒரு தல கம்ப்யூட்டரிலேயே உங்கள் இணையதளத்தை உருவாக்க முடியும் என்று பார்த்தோம். அது Internet Server எனப்படும். இங்கே நீங்கள் உருவாக்க உத்தேசமாக ஆண்டுக்கு 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தவேண்டும். அதேநேரம், இலவச சேவையும் கிடைக்கும்.

அடுத்த பதிவில், Blog உருவாக்குதல் குறித்து பார்ப்போம். அதன்பிறகு, Self hosted site உருவாக்குவோம்.

Post your Comments...